'வீர தீர சூரன் 2' - காளியின் வெறியாட்டம்...ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூலா?


Veera Dheera Sooran 2 - Kalis rampage...did it collect so many crores in a week?
x
தினத்தந்தி 4 April 2025 7:39 AM IST (Updated: 13 April 2025 12:47 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ளநிலையில், வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விக்ரம் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 27-ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ளநிலையில், வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.52 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story