'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் விவரம்

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவரும் 'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் விவரம்
Published on

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விக்ரம் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீர தீர சூரன் 2' திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com