இந்த மாத இறுதியில் வெளியாகும் 'வீர தீர சூரன் 2'?

அருண்குமார் இயக்கியுள்ள 'வீர தீர சூரன் 2' படத்தில் விக்ரம் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் வெளியாகும் 'வீர தீர சூரன் 2'?
Published on

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின. படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசி, மதுரை போன்ற பகுதிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்தின் ரிலிஸை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வரும் எனவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com