யோகிபாபு, விமல் நடிக்கும் "கரம் மசாலா" பர்ஸ்ட் லுக் வெளியீடு

யோகிபாபு, விமல் நடிக்கும் 'கரம் மசாலா' படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
யோகிபாபு, விமல் நடிக்கும் "கரம் மசாலா" பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள 'கரம் மசாலா' படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் பட இயக்குநர் அப்துல் மஜீத். இப்படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ளார். சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை பெரும் பொருட்செலவில், அப்துல் மஜீத் அவர்கள் இயக்குகிறார். பைஜூ ஜேக்கப் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் யோகிபாபு, விமல் நடிக்கும் "கரம் மசாலா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com