வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி கோட்' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு யுவன் இசையமைப்பதே வழக்கம். அனிருத் இசையமைத்த அனைத்து சிவகார்த்திகேயன் திரைப்படங்களும் வெற்றிப்படமாக உருவாகியுள்ளது. அந்த வரிசையில் இப்படமும் வெற்றியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com