நடிகர் அஜித்தை சந்தித்த டைரக்டர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.
நடிகர் அஜித்தை சந்தித்த டைரக்டர் வெங்கட் பிரபு
Published on

நடிகர் அஜித் குமாரின் முக்கியமான வெற்றிப் படம் 'மங்காத்தா'. 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான 'மங்காத்தா' அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். டைரக்டர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது 'மங்காத்தா'. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.

இந்தப் படத்துக்கு பின் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக அறியப்படுகிறார். தற்போது வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து 'கோட்' படத்தை இயக்கி வருகிறார். அதேநேரம் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. விடாமுயற்சி தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

இதற்கிடையேதான் அஜர்பைஜானில் வைத்து டைரக்டர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கருத்து கூறிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com