விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு வெங்கட் பிரபு பாராட்டு

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திற்கு வெங்கட் பிரபு பாராட்டு
Published on

சென்னை,

விஜய் சேதுபதி தனது 50-வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்துள்ளார். இதனை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். 'மகாராஜா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'மகாராஜா' படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மகாராஜா படத்தை ரசித்தேன்.அருமையான திரைக்கதை. அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் . படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com