ஐயப்பனின் மகிமையை சொல்​லும் திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக்

‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்​மன்’ திரைப்படங்கள் பான் இந்​தியா முறை​யில் பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கின்றன.
ஐயப்பனின் மகிமையை சொல்​லும் திரைப்படங்களின்  பர்ஸ்ட் லுக்
Published on

ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக ஆக்ஷன் படமாக, ‘தத்த்வம் அஸி’ உரு​வாகிறது.

‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்கர் இயக்​கு​கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் பணியாற்றி வருகிறார். வழக்கமாக கலகலப்பான, இளைஞர்களை கவரும் இசையால் அறியப்படும் பிரேம்ஜி, இந்த படத்தில் ஒரு மாறுபட்ட இசை அனுபவத்தை வழங்கப் போகிறார் என கூறப்படுகிறது.

வரலாற்​றுப் பின்​னணி​யில் உருவாகும் ‘ஆர்ய கேரள வர்​மன்’ திரைப்​படம் இது​வரை அதி​கம் பேசப்​ப​டாத சுவாமி ஐயப்​பனின் சுயசரிதை கதையை கொண்​டது.16-ம் நூற்​றாண்​டின் வரலாற்​றுப் பின்​னணி​யில், அவரது வீரத்​தை​யும் ஆன்​மீகத் தத்​து​வத்​தை​யும் மைய​மாகக் கொண்டு உரு​வாகிறது. இதை ஜேகே சரவணா, ஆதித்யா தங்​கி​ராலா இணைந்து இயக்​கு​கின்​றனர். ஆன்​மீகம், வீரம், பண்​பாடு ஆகியவை இணை​யும் சக்​தி​வாய்ந்த காட்​சிப் படைப்​பாக இது உரு​வாக இருக்​கிறது.

தந்த்ரா பிலிம்ஸ் சார்​பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்​லும் 2 திரைப்படங்​களை கேஜே சரவணா தயாரிக்​கிறார். இந்​தப் படங்​களின் தலைப்​பு​களான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்​மன்’ ஆகிய​வற்றை வெங்​கட் பிரபு வெளியிட்​டார். இந்த 2 படங்​களும் பான் இந்​தியா முறை​யில் பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com