

சென்னை,
நயன்தாரா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அறம்' திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் கோபி நயினார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.
இந்நிலையில் கோபி நயினாரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு 'கருப்பர் நகரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.