ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்த காட்சியை நினைவுகூர்ந்த வெங்கடேஷ்


Venkatesh recalls his scene with Aishwarya Rajesh
x

ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் ,'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில், இவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்திலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் நடிகர் ராணா டகுபதியின் நிகழ்ச்சியில் சங்கராந்திகி வஸ்துன்னம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசும்போது நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்த காட்சியை நினைவுகூர்ந்தார். அப்போது அவர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காட்சியில் எனது கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும். ஆனால் கொஞ்சம் வேகமாகவே அறைந்து விட்டார் என்று கூறினார்.

1 More update

Next Story