சிரஞ்சீவியுடனான படம் பற்றி மனம் திறந்த 'ராபின்ஹுட்' இயக்குனர்


Venky Kudumula opens up about his film with Chiranjeevi
x

இவர் கடந்த 2020-ல் பீஷ்மாவின் வெற்றிக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார்.

ஐதராபாத்,

சலோ மற்றும் பீஷ்மா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குனர் வெங்கி குடுமுலா, நடிகர் நிதினுடன் காமெடி என்டர்டெய்னரான 'ராபின்ஹுட்' படத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு முன்பு, வெங்கி குடுமுலா கடந்த 2020-ல் பீஷ்மாவின் வெற்றிக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார். இருப்பினும், சில காரணங்களால் அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சிரஞ்சீவியுடனான படம் பற்றி வெங்கி குடுமுலா பேசி இருக்கிறார்.

அவர் கூறுகையில், ' சிரஞ்சீவியிடம் ஒரு கதை கூறினேன். ஆனால், அது அவருக்கு முழு திருப்தி கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அது சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

1 More update

Next Story