பழம்பெரும் இந்தி நடிகை சாய்ரா பானு உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சாய்ரா பானுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழம்பெரும் இந்தி நடிகை சாய்ரா பானு உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Published on

மும்பை,

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், கடந்த ஜூலை 7 ஆம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். அவரது மனைவியும், மூத்த நடிகையுமான சாய்ரா பானு, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் சாய்ரா பானுவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சாய்ரா பானுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com