விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட வெற்றிமாறன்

விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு “அண்டர் 18” என பெயரிடப்பட்டுள்ளது.
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின்  டைட்டிலை வெளியிட்ட வெற்றிமாறன்
Published on

நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “அண்டர் 18” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகின்றார்.

அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் நடைபெறும் கதைகளத்துடன் உருவாகும் இப்படத்தின் டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இப்படத்தை ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் தயாரிப்பாளரான பி ஜகதீஷ் தயாரிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஒசூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com