நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறன்

வட சென்னை பின்னணியில் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்.
நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறன்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த 5-ந் தேதி தக் லைப் படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 , தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 என அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படங்களை முடித்த பின்னர் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com