'வேட்டையன்' பட இயக்குனரின் அடுத்த படம் அறிவிப்பு

சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை மையமாக வைத்து ஞானவேல் இப்படத்தை இயக்க உள்ளார்.
'Vettaiyan' director's next film announcement
Published on

சென்னை, 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் த.செ.ஞானவேல். இவர் கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். தற்பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170-வது படமான வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், ரஜினியுடன், மஞ்சுவாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் முதல் பாடலான் மனசிலாயோ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில்,  த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை மையமாக வைத்து ஞானவேல் இப்படத்தை இயக்க உள்ளார்.

ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு 'தோசா கிங்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கான கதையை ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் இணைந்து எழுதுகின்றனர். ஹேமந்த் ராவ் கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சப்த சாகரடாச்சே எல்லோ சைடு ஏ/சைடு பி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குனர் ஞானவேல் கூறுகையில்,   "இந்தப் படம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் பார்த்த கதையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பு. ஜங்கிலி பிக்சர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com