'வேட்டையன்' படம் : நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
'வேட்டையன்' படம் : நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
Published on

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இந்தநிலையில், 'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்திற்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையேயான உரையாடல் உள்ள காட்சியை வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com