'வேட்டையன்' இசை வெளியீட்டு விழா: டிக்கெட் இருந்தும் விரட்டப்பட்ட ரசிகர்கள் - வீடியோ வைரல்

'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
'Vettaiyan' music launch
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'வேட்டையன்' படம் அடுத்த மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளநிலையில், படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், இதில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு விஐபி டிக்கெட் உள்பட பல்வேறு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த டிக்கெட்டை பயன்படுத்தி ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், டிக்கெட் வைத்திருந்தும் பல ரசிகர்களுக்கு வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே விழாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள ரசிகர்கள் அதிகமாக இருப்பதாக கூறி பின்னர் வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com