வேட்டையன்: ராணா டகுபதியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

நடிகர் ராணா டகுபதியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.
வேட்டையன்: ராணா டகுபதியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது, நடிகர் ராணா டகுபதியின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இது தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவையும் லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com