வேட்டையன் படத்தின் டீசர் வெளியானது

நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'வேட்டையன்' படம் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, நடிகர் பகத் பாசில் மற்றும் ரஜினி ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டது.

முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடலான "ஹண்டர் வண்டார்" இன்று வெளியானது. இதுதவிர படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

வேட்டையன் படத்தில் ரஜினியின் கதாபாத்திர வீடியோவை படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. லைகா புரடக்சன்ஸ் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு, ரஜினியின் பெயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது ரஜினியின் பெயர் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் ஆக்ரோஷமான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி காட்டப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் காவல்துறையின் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com