'சர்தார்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'வேட்டையன்' வில்லன்?


Vettaiyan villain in Sardaar directors next film?
x

இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் பி. எஸ். மித்ரன்.

சென்னை,

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் பி. எஸ். மித்ரன். . இவர் தற்போது சர்தார் - 2 படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், சஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை அடுத்து வேட்டையன் பட வில்லன் ராணாவை இயக்க பி. எஸ். மித்ரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன் என பல தமிழ் படங்களில் ராணா நடித்திருக்கிறார். தற்போது மித்ரன் 'சர்தார் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ராணா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story