"வேட்டுவம், சார்பட்டா-2" - மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் வேட்டுவம் படத்தை இயக்கிவருகிறார்.
"வேட்டுவம், சார்பட்டா-2" - மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வேட்டுவம் என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் செய்தியாளர் வேட்டுவம், சார்பட்டா 2 படம் குறித்த கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த பா.ரஞ்சித், "`வேட்டுவம்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது, 2026ல் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும்" என்ற அப்டேட்டை கொடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com