"வைப் இருக்கு பேபி"...கவனத்தை ஈர்க்கும் ''மிராய்'' படத்தின் முதல் பாடல் போஸ்டர்


“Vibe irukku baby” song from Mirai to drop on this date
x
தினத்தந்தி 23 July 2025 1:30 PM IST (Updated: 23 July 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 5-ம் தேதி பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

சென்னை,

''அனுமான்'' நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய், தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, வருகிற 26-ம் தேதி "வைப் இருக்கு பேபி" என்ற இப்படத்தின் முதல் பாடல் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் வைரலாகி வருகிறது.

ஒத்திவைப்பு வதந்திகளுக்கு மத்தியில், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5-ம் தேதி பல மொழிகளில் வெளியாகும் என்று குழு தெளிவுபடுத்தியுள்ளது.

1 More update

Next Story