''அரசியல் களத்திற்குள் அதிர்வலை''...வைரலாகும் நடிகர் பார்த்திபனின் பதிவு

பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ''இட்லி கடை'' படத்தில் நடித்துள்ளார்.
"Vibration within the political domain"... viral actor Parthipan's post
Published on

சென்னை,

நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரப்போவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ''இட்லி கடை'' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ''அறிவு'' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அந்த பதிவில்,

''நண்பர்களே.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com