

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதையொட்டி ஷீரடி சாய்பாபா கோவிலில் படக்குழுவினருடன் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram