'விடாமுயற்சி' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
'விடாமுயற்சி' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது.

டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் 'சவதீகா' பாடல் வெளியாகி வைரலானது.

'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் 'விடாமுயற்சி' வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தை ஜனவரி இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதாக சென்சார் சான்றிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், 'விடாமுயற்சி' திரைப்படம் 2.30 மணிநேரம் கொண்ட படம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com