நயன்தாராவை கேலி செய்த நடிகை..! ஏய் பவுடர் மூஞ்சி...! டிரோல் செய்யும் ரசிகர்கள்

முன்னதாக தியாகராய நகரில் உள்ள தியேட்டரில் தான் நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த நயன்தாரா அங்கு திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
நயன்தாராவை கேலி செய்த நடிகை..! ஏய் பவுடர் மூஞ்சி...! டிரோல் செய்யும் ரசிகர்கள்
Published on

சென்னை

நயன்தாரா பட விழாக்களுக்கு வருவது இல்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கிறார் என்றும் தயாரிப்பாளர்கள் குறை சொல்கிறார்கள்.

இந்த நிலையில் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் இதற்கு நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாகவே வந்தன. கதாநாயகிகளுக்கு படங்களில் ஏன் முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்று அப்போது நினைப்பது உண்டு.

அந்த சமயத்தில் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்தேன். சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிறகு பட விழாக்களில் பங்கேற்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதை பின்பற்ற முடியவில்லை.

இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படங்கள் வருகின்றன. தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன்வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது'' என்றார்.

முன்னதாக தியாகராய நகரில் உள்ள தியேட்டரில் தான் நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த நயன்தாரா அங்கு திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் கனெக்ட் படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நயன்தாரவிடம், பிரபல தொகுப்பாளினி டிடி கேள்விகளை கேட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

விமர்சனங்கள் எப்போதும் வந்து கொண்டு தான் இருக்கும், அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு ஒன்று சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் செய்கிறேன் அவ்வளவுதான்.

அதேபோல சமீபத்தில் ஒரு நடிகையின் பேட்டியை பார்த்தேன், என் பெயரை சொல்லவில்லை. ஆனால் என்னைப்பற்றி தான் சொல்லி இருந்தார். ஒரு ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே பஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தாங்க.

அதற்காக ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. கமர்ஷியல் பிலிம், ரியலிஸ்டிக் பிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் பிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செயப்படும். ஆனால், அவங்க சொன்னது கமர்ஷியல் பிலிம்பில் பற்றிதான். அந்த சீனுக்கு நான் சோகமாகத்தான் மேக்கப்போட்டுக்கொண்டு போனேன் ஆனால் என் டைரக்டர் எதுக்கு இவ்வளவு சோகம். தேவையில்லை என்றார். ஏன் என்றால் அது கமர்ஷியல் பிலிம்.

நயன்தாராவின் இந்த பேட்டியை பார்த்தவர்களுக்கு நயன்தாராவை கேலி செய்த நடிகை யார் என்று தெரியவில்லை. பின்னர் அவர்கள் அலசி ஆராய்ந்து அது யார் என்று கண்டுபிடித்து அவர் பேசிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர்.

அந்த நடிகை வேறுயாரும் இல்லை மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தான். நடிச்சதே 3 படம் அதுக்குள்ள நயன்தாராவை பற்றி கிண்டலடிக்கிறியா? என்றும், ஏய் பவுடர் மூஞ்சி அவ்வளவுதான் என்றும் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com