'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்
Published on

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் விடுதலை 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 7.65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடவில்லை. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com