ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை
Published on

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ஜெயிலர் 2 படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்த நிலையில், தற்போது இந்த ஜெயிலர் 2 படத்தில் இன்னொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார். இரண்டாம் பாகத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதனால்தான் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் மோகன்லாலின் கதாபாத்திரமான மேத்யூ கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் படத்தில் வித்யா பாலன் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய இடத்தில் நடிக்கிறாரா என்பது விரைவில் தெரியவரும். இவர் ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com