விஜய் பட வில்லன் நடிகர் திருமணம்

பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் திருமணம், லண்டனில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் பட வில்லன் நடிகர் திருமணம்
Published on

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா-2, சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜமால். இந்தி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வித்யூத் ஜமால் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள குதா ஹபிஸ்-2 இந்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கும் நடிகை சிவலீகா ஓபராய்யுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகி அதனை இருவரும் மறுத்தனர். இந்த நிலையில் வித்யூத் ஜமாலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் நந்திதா மஹ்தானியும் காதலிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

நந்திதா ஏற்கனவே நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூரை மணந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யூத் ஜமாலுக்கும் நந்திதாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் இவர்கள் திருமணம் லண்டனில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண தேதியை ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com