அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த வலியை மனந்திறந்த விக்னேஷ் சிவன்

அஜித்தின் ஏகே-62 படத்தில் இருந்து நீக்கபட்ட வேதனையை தனக்கே உரிய பாணியில் வெளியிட்டு உள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.
அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த வலியை மனந்திறந்த விக்னேஷ் சிவன்
Published on

சென்னை

டைரக்டர் விக்னேஷ் சிவன் கடைசியாக இயக்கிய படம் காத்துவாக்குல இரண்டு காதல். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அஜித்தின் ஏகே62 படத்தை அடுத்து இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாக கூறப்பட்டது.இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தபோது விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழி திருமேனி படத்தை இயக்கபோவதாகவும் விக்னேஷ் சிவனின் கதை திருப்திகரமாக இல்லாததால் ஏகே 62 இல் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வேதனையும், அவமானமும் அடைந்த விக்னேஷ் சிவன், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகிறார்ர். சில நாட்களுக்கு முன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விலகியதற்கான வேதனையை டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கே உரிய பாணியில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அதில் அவர் கூறி இருப்பதாவது:-

என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் பாராட்டு மற்றும் வெற்றியை விட அதிகமாக நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

ஆறாவது படத்திலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்ற கடவுளுக்கும் மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

" உங்களின் அன்பான நம்பிக்கை என்னில் என்னைக் கண்டறிய உதவியது மட்டுமல்லாமல், இந்த கணிக்க முடியாத மற்றும் நிச்சயமற்ற சூழலில் வாழ்வதற்கான நம்பிக்கையையும் எனக்கு அளித்தது. இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன்.

எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. என் குழந்தைகளுடன் ஒவ்வொரு கணமும் சுவாசிக்கவும் அனுபவிக்கவும் சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. " அவர் தனது மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என கூறி உள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com