டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நன்றி கூறியுள்ளார்.
டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்
Published on

சென்னை,

நடிகர் நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இதைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய டுவிட்டர் கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. உண்மையைச் சொன்னால் கடந்த வாரம் மிகவும் அமைதியாக இருந்தது.

என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க " என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com