பிரியாணியை கேக்காக வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ஆண்டனி..!

நடிகர் விஜய் ஆண்டனி ‘சக்தித் திருமகன்’ பட விழாவில் பிரியாணியை கேக்காக வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரியாணியை கேக்காக வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் ஆண்டனி..!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மார்கன்' என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சக்தித் திருமகன் படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பட விழாவில் பங்கேற்ற விஜய் ஆண்டனி, விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் 'டம்மி' துப்பாக்கியால் சுட்டு வரவேற்றார். பின்னர் தனது பிறந்தநாளையொட்டி, பிரியாணி 'கேக்' வெட்டி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com