'ஜென்டில்வுமன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி

'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ஜென்டில்வுமன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவர் 'இந்தியா பாகிஸ்தான்' என்ற படத்தில் நடித்து ஹீரோகவாக அறிமுகமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.

இவர் தற்போது 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 'ககன மார்கன், வள்ளி மயில்' என்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக 'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com