“பூக்கி” படத்தின் புரோமோவை வெளியிட்ட விஜய் ஆண்டனி

இந்த படம் வருகிற பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“பூக்கி” படத்தின் புரோமோவை வெளியிட்ட விஜய் ஆண்டனி
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது பூக்கி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், 'பூக்கி' படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், 'பூக்கி படத்தின் புதிய புரோமோ வீடியோ விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com