விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
Published on

சென்னை,

நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சி.அஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படம், அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com