விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கதாநாயகனாக நடித்த நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன், பிச்சைக்காரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தொடர்ந்து அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை விஜய் ஆண்டனி கைவசம் வைத்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'தமிழரசன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com