விஜய் ஆண்டனியின் “அப்பா குட்டி” பட பர்ஸ்ட் லுக் அப்டேட்

தெலுங்கு மொழியில் "நாநாகுட்டி" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின்  “அப்பா குட்டி” பட பர்ஸ்ட் லுக் அப்டேட்
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் "அப்பா குட்டி" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய படம் "அப்பா குட்டி". விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது.

நடிகர்கள் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் ஆண்டனி இசையமைக்கும் "அப்பா குட்டி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று (மே 21) வெளியிட்டுள்ளனர். இத்துடன், தெலுங்கு மொழியில் "நாநாகுட்டி" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com