விஜய் ஆண்டனியின் "மார்கன்" பட வசூல் இத்தனை கோடியா?

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'மார்கன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் ஆண்டனியின் "மார்கன்" பட வசூல் இத்தனை கோடியா?
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படத்தில் நடித்துள்ளார்.

'மார்கன்' படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உலகளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் கடந்த  இரண்டு நாட்களில்  ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com