'மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் கவர்ந்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் 'கோலி சோடா 2' திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் 'மழை பிடிக்காத மனிதன்'.

'ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com