விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் “நூறு சாமி” படம் மே 1ம் தேதி வெளியாகிறது.
விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
Published on

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது இப்படம். இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்போது ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படம் மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடலான ‘மாய கனவோ’ பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் மோகன் ராஜன் வரிகளில் சின்மயி, கபில் கபிலன் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com