விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் “நூறு சாமி” படம் மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
Published on

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரின் வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாமதமாகியுள்ளன.

இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது இப்படம். இப்போது ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com