விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2025 6:38 PM IST (Updated: 24 July 2025 7:40 AM IST)
t-max-icont-min-icon

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மார்கன்' என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து இவர் தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான 'அருவி, வாழ்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை பெற்றது.

படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாகும் என்று நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story