தலைமறைவான நடிகருக்கு உதவி; பிரபல நடிகரிடம் போலீஸ் விசாரணை

தலைமறைவான விஜய்பாபுக்கு கிரெடிட் கார்டுகளைக் கொடுத்து உதவிய சைஜு குரூப்பிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான நடிகருக்கு உதவி; பிரபல நடிகரிடம் போலீஸ் விசாரணை
Published on

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மயக்க மருந்து கொடுத்து பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை புகார் அளித்தார். இதையடுத்து விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் துபாய் தப்பி சென்றுவிட்டார்.

பின்னர் கோர்ட்டு விஜய்பாபுவை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததால் துபாயில் இருந்து கேரளா திரும்பி கொச்சி போலீசில் ஆஜரானார். அப்போது நடிகையின் சம்மதத்துடன் இருவரும் உறவு கொண்டோம் என்றும், படங்களில் நடிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்காததால் ஆத்திரத்தில் புகார் கூறியுள்ளார் என்றும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

விஜய்பாபு செல்போன்களைக் கைப்பற்றிய போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய்பாபுவுக்கு கிரெடிட் கார்டுகளைக் கொடுத்து மலையாள நடிகர் சைஜு குரூப் உள்பட 4 பேர் உதவியதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சைஜு குரூப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சைஜு குரூப் தமிழில் சித்து பிளஸ்-2, மறுபடியும் ஒரு காதல், தனி ஒருவன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com