விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்

திரிஷா குறித்து சமீப காலமாக பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 40 வயதான திரிஷா, தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகையாக இன்றும் வலம் வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா குறித்து சமீப காலமாக பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த நிலையில், விஜய் குறித்து திரிஷா கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது மீண்டும் வைரல் ஆகி வருகிறது. விருது நிகழ்ச்சி ஒன்றில் வரிசையாக ஒவ்வொரு நடிகரின் படமும் காட்டப்பட்டது.

அப்போது அவர்கள் பற்றி திரிஷா கருத்து கூறினார். அந்த வகையில், விஜய் படம் திரையில் காட்டப்பட்ட போது, “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார். திரிஷாவின் இந்த பேச்சு வலைத்தளங்களில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. நடிகை திரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார். மேலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் ’மட்ட' எனும் பாடலுக்கு திரிஷா நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com