மணப்பெண் தேடும் விஜய் தேவரகொண்டா..!

விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில் திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடுவதாக தெரிவித்துள்ளார்
மணப்பெண் தேடும் விஜய் தேவரகொண்டா..!
Published on

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சமந்தாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தநிலையில் விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில், ''ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால், அது நம்மை காயப்படுத்தும். கடந்த காலங்களில் நிறைய தோல்வி படங்களில் நடித்து இருக்கிறேன். அதுபோல் வெற்றி படங்களும் கொடுத்து இருக்கிறேன். வெற்றி, தோல்வி இரண்டு அனுபவங்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன்.

நான் தோல்விகளை பார்த்து அஞ்சுபவன் அல்ல. படங்கள் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து முயற்சிகளில் முன்னேறுகிறேன். பெண்கள் மீது வெறுப்பு காட்டுகிறேன் என்கின்றனர். எதற்காக அப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அந்த மாதிரியான ஆள் இல்லை. இப்போது திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com