விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் புதிய பாடல் வெளியானது

'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் புதிய பாடல் வெளியானது
Published on

கீதா கோவிந்தம்', சர்க்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி 'கல்யாண சத்தம் சத்தம்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை கார்த்திக் மற்றும் பத்ம லதா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com