விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' படத்தின் டிரைலர் அப்டேட்..!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' படத்தின் டிரைலர் அப்டேட்..!
Published on

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், லைகர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி லைகர் திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 21) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com