டைரக்டராக விரும்பும் விஜய் தேவரகொண்டா

டைரக்டராக விரும்பும் விஜய் தேவரகொண்டா
Published on

தெலுங்கில் வசூல் சாதனை நிகழ்த்திய அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு படங்கள் குவிந்தன. தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வந்துள்ளது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறும்போது, "எனக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நடிப்பதை கொஞ்ச நாட்கள் ஒதுக்கி வைத்து விட்டு ஏதாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இளம் வயதில் இருப்பதால் நடிகனாக என்னால் முடிந்தவரை உழைப்பேன். அதன்பிறகு நிச்சயம் இயக்குனராவேன்.

ஹாலிவுட்டில் கிளாடியேட்டர், தெலுங்கில் போக்கிரி எனக்கு மிகவும் பிடித்த படங்கள். எப்போது திருமணம் செய்து கொள்ள தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வேன். எனக்கு மனைவியாக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com