திருப்பதி கோவிலில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி கோவிலில்  விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி
Published on

நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது. திருமண விழாவிற்கு ராஷ்மிகா மந்தனா டோலியில் வரும் காட்சிகளும், விஜய் தேவரகொண்டா வாள் ஏந்திய படியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இதனிடையே, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு இருவரும் இனிப்பு வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com