முதல்-அமைச்சர் விஜய்யுடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா சந்திப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா சந்திப்பு
Published on: 

‘ரணபலி’ படத்தின் புரொமோஷன் பணிக்காக சென்னை வந்த விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகா மந்தனா தம்பதி தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

‘ரணபலி’ படத்தின் புரொமோஷன்

‘ரணபலி’ படத்தின் புரொமோஷன் பணிக்காக விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகா மந்தனா மற்றும் படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

திரையுலக நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com